உரிய வசதிகள் கேட்டு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 144 பயிற்சி மருத்துவர்கள் பணிபுரித்து வருகின்றனர். இவர்கள் இன்று பணிகளை புறக்கணித்து மருத்துவகல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியபடி பயிற்சி மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு 2500 ரூபாய் மட்டுமே உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது எனவும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை உரிமை தொகையாக கொடுக்கும் நிலையில் தங்களுக்கும் உரிமை தொகையினை அதிகப்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
உரிமை தொகை அதிகரித்து தருவதுடன் தங்குமிடம், உணவு போன்ற வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ள பயிற்சி மருத்துவர்கள், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்ர்தை நடத்திய கல்லூரி நிர்வாகம், இரு தினங்களில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொரொனா சிகிச்சை உட்பட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என பயற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu