கோவை மாநகரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு: மீறினால் வழக்கு வரும்
கோவை மாநகர பகுதி
கோவை மாநகராட்சி எல்லைக்குள் ஏற்படும் விபத்துக்களை குறைக்க, வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை கோவை மாநகர காவல்துறை அமல்படுத்தியது. இதன்படி கோவை மாநகரில் 40 கி.மீ வேகத்திற்கு மேல், வாகனங்களை இயக்க கூடாது என கோவை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை காந்திபுரம் முதல், கணபதி வரை, 100 அடி வீதி, கிராஸ் கட் ரோடு, பாரதியார் ரோடு வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரை, சுக்கிரவார்பேட்டை முதல் மேம்பாலம் வரை, 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள இயக்க வேண்டும் எனவும் இந்த பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல் துறையால் விதிக்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டை, இரண்டு மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu