கோலம் போட்டு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோலம் போட்டு விழிப்புணர்வு    கல்லூரி மாணவர்கள் அசத்தல்
X

கல்லூரி மாணவர்கள் ரங்கோலி கோலம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு செய்திருந்தனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எம்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது முதல் முறை தேர்தலில் வாக்காளிப்பவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள் நூறு சதவீதம் வாக்களிப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கொடியில் விரல் மை இருப்பது போன்ற ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்காளிக்க வேண்டிய அவசியம் குறித்த வாசகங்களையும் எழுதி இருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business