கோவையில் தடுப்பூசி போட மழையில் குடை பிடித்து காத்திருந்த மக்கள்
கோவையில், மழையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்கள்
கோவை மாவட்டத்தில் தற்போது வரை, சுமார் 9 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று மாவட்டத்தில் 25000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 31 சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் தலா 250 தடுப்பூசிகள் வீதம் 7750 தடுப்பூசிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே போல, ஊரகப்பகுதிகளுக்கு 13,800 தடுப்பூசிகளும், சிறப்பு முகாம்களில் 2880 தடுப்பூசிகளும் போடப்படுகின்றது.
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளியில் உள்ள தடுப்பூசி முகாமில் மழையையும், பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதாக காத்திருந்தனர்.
மேலும் பலர் குடை இல்லாமல் மழையில் நனைந்தபடி தடுப்பூசிக்காக சாலையில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. மழை பெய்வதால், தடுப்பூசி மையங்களில் மழையில் நனையாதபடி ஏற்பாடு செய்ய வேண்டும்; அல்லது தற்காலிக பந்தல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu