முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது பஞ்சமி நில ஆக்கிரமிப்பு புகார்
முன்னாள் ஐஏஎஸ் சிவகாமி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் புகார் மனு அளித்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தர வேண்டுமென சமூக சமத்துவ படையின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ்-மான சிவகாமியும் சமூக நீதிகட்சியின் தலைவருமான பன்னீர்செல்வமும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி, கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தையும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் அவர்களுக்கே வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வரும் நிலையில், அவர்களின் இல்ல சூழ்நிலைகளை புரிந்து கொண்டு 7 மணிக்கு வேலைக்கு வர ஆவணம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைய மாவட்ட ஆட்சியரிடம் முக்கியமாக வழங்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும் கிணத்துக்கடவு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை விசயத்தில் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பொது விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் பஞ்சமி நில விவகாரத்தில் அரசுக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்று தெரிவித்த அவர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை என கூறினார்.
அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கு அந்த மக்களிடம் உரிய பணம் தருவதாக சிலர் கூறுவது பஞ்சமி நில விதிகளையே அழிப்பது போல் உள்ளதென விமர்சித்தார். இந்த அரசு பஞ்சமி நிலத்தை மீட்டு தருகிறோம் என்று கூறி உள்ளது எனவும் அதற்கான நடவடிக்கைகளை கூடிய விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu