கோவை அருகே ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

கோவை அருகே ஒரு டன் குட்கா பறிமுதல்:  ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

கோவை போத்தனூர் அருகே, ஒரு டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, ரூ. 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே, மேட்டூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போத்தனூர் காவல் துறையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தில் சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. குடோனில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள் விற்பனைக்காக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலை கொண்டு வந்த ஜெபராஜ் (51) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!