கொரொனா 3வது அலையை சமாளிக்க கோவையில் உட்கட்டமைப்பு தயார்: ஆட்சியர்
செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் சமீரன்.
தமிழக கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கோவை வழியாக அனுமதிக்கபடுவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கேரளாவில் இருந்து தமிழக எல்லை வழியாக வரும் 99 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி போடாமலும் கொரோனா சோதனை செய்யாமலும் வரும் கேரள பயணிகளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிவித்த அவர், உடல் வெப்ப பரிசோதனைகளும் மேற்கோள்ளப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பவதாக கூறினார்.
ஞாயிற்று கிழமை தினங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போதும் எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு இருக்கும். ஊரடங்கு நேரத்தில் பொழுது போக்கு, சுற்றுலா செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். நாளை மெகா தடுப்பூசி முகாம் 1000 மேற்பட்ட இடங்களில் நடைபெறுகின்றது.
இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து கைவசம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.15 - 18 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது எனவும், கோவை மாவட்டத்தில் முதல் தவணை 96 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை 78 சதவீதம் பேரும் போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்று கிழமை இறைச்சி,மீன் கடைகள் இயங்காது எனவும், தடையை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர்,கொரொனா 3 வது அலையை சமாளிக்க கோவையில் உட்கட்டமைப்பு தயாராக இருக்கின்றது எனவும், தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது எனவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu