கோவை தனியார் குடோனில் பெட்டி பெட்டியாக ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்
கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதி 62 வார்டில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனில் பரிசு பொருட்களை வைத்திருப்பதாக கூறி அதிமுக தொண்டர்கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் ராமநாதபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது குடோனை திறந்து சோதனையிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தினர். நீண்ட நேரமாகியும் குடோன் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வராததால் அதிகாரிகள் கதவுகளை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.
அப்போது குடோனில் பெட்டி பெட்டியாக ஹாட் பாக்ஸ் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹாட் பாக்ஸ்களுக்குள் பணம் எதுவும் இல்லாததால் அங்கு திரண்டு இருந்த அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஹாட் பாக்ஸ்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சுகுணாபுரம் பகுதியில் ஹாட் பாக்ஸ்கள் எடுத்துச் சென்ற வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதும், கோவையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வினியோகிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu