பொள்ளாச்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே  சிறுமி பாலியல் பலாத்காரம்:  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

கோபிநாத்.

சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் ஆழியார் புளியங்கண்டி விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் கோபிநாத். 21வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தற்போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோபிநாத்தை கிணத்துக்கடவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!