பொள்ளாச்சி அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தீ விபத்தால், தென்னைநார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரும்புகை.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள முத்துகவுண்டனூரை சேர்ந்தவர் கதிர்வேல் என்கிற ராசு வயது (50 ). இவருக்கு, அதே ஊரில் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னைநார் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்று 3 பேர் வேலையில் இருந்தனர். அப்போது திடீரென தென்னைநார் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீ பிடித்துள்ளது. தீ மளமளவென அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னைநார் மற்றும் தேங்காய் மட்டைகள் மீதும் பரவி, பற்றி எரிந்தது. இதுபற்றி, உரிமையாளர் கதிர்வேலுக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே, தீ விபத்தால், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
தகவல் அறிந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை போராடி அணைத்தனர். இதில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள மிஷின்கள், தேங்காய் மட்டைகள் ,தென்னை நார்கள் தீயில் கருகி சாம்பலாகின.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu