முன்னாள் முதல்வர் ஜெ., வேடமணிந்த மகளுடன் வந்து அமமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெ., வேடமணிந்த மகளுடன் வந்து அமமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்
X

ஜெயலலிதா வேடமணிந்த மகளுடன் வந்த அமமுக வேட்பாளர்.

அவரை சுற்றிலும், கருப்பு உடை அணிந்த சிறுவர்கள் பொம்மை துப்பாக்கிகளுடன், கண்களில் குளிர்கண்ணாடி அணிந்தபடி வந்தனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 90வது வார்டில் அமமுக சார்பில் நாபிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கோவை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது அவருடன் அவரது மகள் நாஃபில்லா என்பவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் கண்ணாடி, பச்சை நிற சேலையுடுத்தி வந்தார். அவரை சுற்றிலும், கருப்பு உடை அணிந்த சிறுவர்கள் பொம்மை துப்பாக்கிகளுடன், கண்களில் குளிர்கண்ணாடி அணிந்தபடி வந்தனர். சிறுவர்களும் தத்ரூபமாக தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடந்து வந்தது, அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனம் ஈர்த்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான அன்பை பறைசாற்றும் வகையில் மகளுக்கு வேடமணிந்து அழைத்து வந்ததாக அப்போது வேட்பாளர் நாபிக் தெரிவித்தார்.

Tags

Next Story