கோவை மாநகராட்சி 97வது வார்டில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு

கோவை மாநகராட்சி 97வது வார்டில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
X

சுயேட்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி.

97 வது வார்டு வேட்பாளராக திமுக சார்பில் 22 வயதான நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார்.

கோவை மாநகராட்சியில் 97 வது வார்டு வேட்பாளராக திமுக சார்பில் 22 வயதான நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார். இவர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சேனாதிபதியின் மகள். இந்நிலையில் இவர் மீது அதே வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் புகார் மனு அளித்தார். அதில் தேர்தல் விதிகளை மீறி செயல்படும் நிவேதாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பின்னர் பேட்டியளித்த சுயேட்சை வேட்பாளர் நிரஞ்சனா தேவி, 97 வது வார்டில் திமுகவினர் வரம்பு மீறி செயல்படுவதாகவும், திமுக வேட்பாளர் நிவேதா மாவட்ட செயலாளர் சேனாதிபதியின் மகள் என்பதால் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு அதிகாரிகள் செயல்படுவதாகவும் தெரிவித்தார். 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் 97 வது வார்டில் மட்டும் ஏராளமான வாகனங்கள் தேர்தல் பணிக்காக சுற்றி வருவதாகவும், அந்த வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் கொடுப்பதாகவும், இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்த அவர், 97 வது வார்டில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 97 வது வார்டில் மட்டும் 3 கோடி ரூபாயை தாண்டி திமுகவினர் செலவு செய்து இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் இன்னும் செலவு செய்வார்கள் எனவும் சுயேட்சை வேட்பாளர் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி