/* */

கோவையில் கொரோனா அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்:ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

கோவையில் கொரோனா அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்:ஆட்சியர்
X

வாளையார் பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு.

கோவையை அடுத்த தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஓரே நாளில் 32801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாளையார் சோதனை சாவடியில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேரளாவில் பாலக்காடு,மலப்புரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகமாக இருக்கின்றது எனவும், இதனையடுத்து எல்லையில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இரு தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாகவும்,கேரளாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் போதுமான ஆவணங்கள் வைத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார் . அதே வேளையில் போதுமான ஆவணங்கள் இல்லாமல் வரும் நபர்கள் திருப்பி அனுப்பபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது எனவும், இது அதிகமாகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டி இருக்கும் என தெரிவித்த அவர், கேரளாவில் இருந்து வரும் கோவைக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு அனுப்ப பாலக்காடு, மலப்புரம் மாவட்ட நிர்வாகங்களுடன் பேசி அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் கேரளாவில் முதல் ஊசி போட்டு இருந்தால், இரண்டாவது தவணை இங்கு கல்லூரிகளில் போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், கோவை மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது எனவும் இதில் 70 சதவீதம் அரசு சார்பிலும் மற்றவை தனியார் மருத்துவமனை, சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு போடப்பட்டுள்ளது எனவும், இரண்டாம் தவணை போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இருக்கின்றது எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

Updated On: 28 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்