தனியார் மருத்துவமனை ஊழியர்கள் - கொரோனா நோயாளியின் உறவினர்கள் மோதல் : 7 பேர் மீது வழக்கு

தனியார் மருத்துவமனை ஊழியர்கள் - கொரோனா நோயாளியின் உறவினர்கள் மோதல் : 7 பேர் மீது வழக்கு
X
கோவை சுந்தராபுரத்தில், தனியார் மருத்துவமனை ஊழியர்கள், கொரோனா நோயாளியின் உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. கடந்த மாதம் 24 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின் நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்த ஆறுசாமியின் உறவினர்கள், சிகிச்சை விபரம் மற்றும் கட்டணத்திற்கான இரசீது கேட்டுள்ளனர்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் இரசீது கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆறுசாமியின் உறவினர்கள், இரசீது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த மருத்துவரின் செல்போனை பிடிங்கி விட்டு உறவினர்கள் வெளியே வந்தபோது மருத்துவமனை ஊழியர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

அப்போது நோயாளியின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும், சாலையிலேயே மோதிக்கொண்டனர், இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொரொனா நோயாளியின் உறவினர்கள் 7 பேர் மீது மருத்துவமனை மற்றும் மருத்துவப்பணியாளர்களை தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story