அரியவகை நோயால் அவதியுறும் 6 மாத குழந்தை - ரூ.16 கோடி ஊசிக்கு உதவிகோரும் பெற்றோர்

அரியவகை நோயால் அவதியுறும் 6 மாத குழந்தை -  ரூ.16 கோடி ஊசிக்கு உதவிகோரும் பெற்றோர்
X
கோவையில், அரியவகை நோயால் தவிக்கும் 6 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி போடுவதற்கு உதவிகோரி பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கக சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் - ரோமிலா தம்பதி. தினேஷ்குமார், எலட்டிரீசனாக உள்ளார். இவர்களுக்கு ஜேசன் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு நாளடைவில், கால்கள் செயல் இழந்து காணப்பட்டதால், பெற்றோர்கள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மருத்துவர் வேல்முருகனை அணுகியுள்ளனர்.

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், அந்த குழந்தைக்கு எஸ்எம்ஏ என்ற உடலில் செல் இல்லாத குறைபாட்டை கண்டறிந்தார். இந்த குறைபாட்டை போக்க, ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு அளித்துள்ளனர். தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பியுள்ளனர்.

குழந்தையின் பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் ஊசி போட வேண்டிய நிலை உள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களின் குழந்தையை காப்பாற்ற, தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும். குழந்தையின் 2 வயதிற்குள் அந்த ஊசியை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக, அவர்கள் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்