கோவை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 22 வயது மாணவி

கோவை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 22 வயது மாணவி
X

நிவேதா சேனாதிபதி.

97 வது வார்டில் 22 வயது இளம்பெண் நிவேதா சேனாதிபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, ஐயுஎம்.எல், மமக ஆகிய கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்தைகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திமுக வெளியிட்டுள்ள 8வது கட்ட பட்டியலில் கோவை மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் முதல்கட்டமாக 19 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 97 வது வார்டில் 22 வயது இளம்பெண் நிவேதா சேனாதிபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடவள்ளி பகுதியை சேர்ந்த இவர், பஞ்சாப்பில் எம். ஏ. சைக்காலஜி படித்து வருகிறார். இவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள் ஆவார். கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிவேதா வென்றால் மேயராகும் வாய்ப்பிருப்பதாக கட்சி நிர்வாகிகளிடையே பேச்சு நிலவுகிறது. இதே போல் முன்னாள் கவுன்சிலராக இருந்த கார்த்திக் செல்வராஜுக்கு 72வது தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்