ரயில் மோதி காட்டு யானை படுகாயம்
கோயமுத்தூரில் ரயில் மோதி காட்டு யானை படுகாயம் அடைந்தது. இதில் யானை உயிரைக் காப்பாற்ற வனத்துறை முயற்சி செய்து வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூர் முதல் வாளையாறு வரையிலான ரயில் தடம் வனப்பகுதியை ஒட்டி செல்கிறது. இத்தடத்தில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் விபத்துக்குள்ளாவது நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பிரிவு பகுதியில் நேற்றிரவு ஒரு ஆண் காட்டு யானை வாளையார் ஆற்றில் தண்ணீர் அருந்த சென்றுள்ளது.ரயில் தண்டவாளத்தை அந்த யானை கடக்க முயன்ற போது, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி யானை படுகாயமடைந்தது. தொடர்ந்து நடக்க முடியாமல் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் யானை படுத்துவிட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
உயிருக்கு போராடி வரும் யானைக்கு வனத்துறை டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அத்தடத்தில் யானை ரயில் மோதலை தடுக்க மிதமான வேகத்தில் ரயிலை இயக்க வனத்துறை அறிவுறுத்தி இருந்தாலும், ரயில்களை வேகமாக இயக்குவதே விபத்து ஏற்பட காரணமென வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu