கேரளாவிலிருந்து கோவை வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரளாவிலிருந்து கோயமுத்தூர் வரும் பயணிகளுக்கு இ - பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கேரள எல்லையில் முக்கியமான 13 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து கோவை வரும் பொதுமக்கள் கட்டாயம் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேரள பயணிகளிடம் இ பாஸ் மற்றும் கொரோனா சான்றிதழ் உள்ளதா என்பதை சோதித்த பின்னரே, கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பயணிகளின் உடல் வெப்ப நிலையும் சோதிக்கப்படுகிறது. இதேபோல கோவை ரயில்நிலையம், போத்தனூர் ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu