கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே - அமைச்சர் வேலுமணி

கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே - அமைச்சர் வேலுமணி
X

அதிமுகவை பொறுத்த வரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோயமுத்தூர் கரும்பு கடை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி பேசுகையில் கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடைபெற உள்ளது எனவும் ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்த பெருமை இந்த அரசுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த போட்டியில் பங்கேற்கும் காளைகளும், வீரர்களும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என தெரிவித்தவர் வெற்றி பெறுவோர்க்கு மாருதி கார், காளைகளுக்கு தங்க நாணயம்,சைக்கிள்,பீரோ, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 1000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் 5 லட்சம் மக்கள் இதனை பார்வையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம் என்றார். காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைதுறை சார்பில் 18 குழுக்களும், பொது சுகாதாரத்துறை சார்பில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன எனவும் வீரர்கள் முழுமையான பரிசோதனைக்கு பின் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்ள முடியும். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,அதிமுகவை பொறுத்த வரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான் என கூறினார்.

Tags

Next Story
Will AI Replace Web Developers