அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர்

அனைத்து  தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர்
X
கோவைiயச் சேர்ந்த 105 வயதான மாரப்ப கவுண்டர்.1952 முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை தவறாது வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

1952 முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை தவறாது வாக்களித்த பெருமைக்குரியவர் மாரப்ப கவுண்டர்.கோவைi சித்ரா அருகே உள்ள கருப்பராயன் பாளையத்தை சேர்ந்த மாரப்ப கவுண்டர்

1916ம் ஆண்டு ஜீன் மாதம் 1 ஆம் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு வயது 105. இவரது பிறந்த தேதியை அவரது பெற்றோர்கள் ஓலையில் தேதி உள்ளிட்ட விபரங்களை தமிழில் எழுதி வைத்துள்ளனர்.

விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக கூறிய மாரப்ப கவுண்டர் மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கொதள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்ப கவுண்டர்105 வயதானவர் வாக்களித்து செல்கிறார் என தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். 105 வயதில் ஓட்டுப்போட்டு திரும்பியவரை பொதுமக்கள் பெருமையோடு பார்த்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!