கோவை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
X

கோப்பு படம்

கோவை விமான நிலையத்தில், ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ.2 கோடி மதிப்பிலான, 7 கிலோ 908 பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில், தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் , தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய தமிழகத்தை 6 பேரிடம் இருந்து, 7 கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் 6 பேரிடமும் இருந்து தங்கத்தை பறிமுதல் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபகாலமாக தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிபட்ட 6 பேரும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இவர்களை ஒரே நபர் அனுப்பினாரா அல்லது வெவ்வேறு நபர்கள் அனுப்பி இருக்கின்றனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!