கள்ளக்காதலியுடன் சேர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை: கொடூர தந்தை கைது

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை: கொடூர தந்தை கைது
X
கோவையில், கள்ளக்காதலியுடன் சேர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 4 வயது மகள் உள்ளனர். இதனிடையே அந்த நபருக்கு செங்கல் சூளையில் பணியாற்றும் 39 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில், தனது 4 வயது மகளை கள்ளக்காதலி வீட்டிற்கு, அந்த நபர் அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சிறுமி, தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போக்சோ மற்றும் சிறார் நீதிச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் தந்தை மற்றும் கள்ளக்காதலி இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story