அதிமுகவிற்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் - முன்னாள் எம்எல்ஏ பேட்டி

அதிமுகவிற்கு சசிகலா தலைமையேற்க வேண்டும் - முன்னாள் எம்எல்ஏ பேட்டி
X

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி.

அதிமுகவின் இரட்டை தலைமையை விரும்பாமல் மக்கள் வாக்களித்து உள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி விளாங்குறிஞ்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளனர். அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தலைமை சரியில்லாமல் போனது தான் என தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவின் இரட்டை தலைமையை விரும்பாமல் மக்கள் வாக்களித்து உள்ளனர் என கூறினார். அமமுக அதிமுக இணைந்து சசிகலா தலைமையில் டிடிவி வழிகாட்டுதலில் செயல்பட்டால் தான் அதிமுக மீளும் எனவும் தெரிவித்தார். இரண்டிலும் இருக்கின்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுகொள்வதாகவும் கூறினார்.

தற்போது எனக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு தரவில்லை என கூறிய அவர் கட்சியின் தலைமையில் இருந்து சட்டமன்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க தன்னை கேட்டுகொள்ளததால் நான் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் இவர்கள் பிரிந்து இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்று விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலை அப்போதே நடத்தி இருந்தால் அதிமுக சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் வென்றிருக்கும் எனவும் கூறினார்.

மேலும் முன்னதாகவே தேர்தலை நடத்தி இருந்தால் நாம் வென்றிருக்கலாம் என பல அதிமுக கவுன்சிலர்கள் தன்னிடம் தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்தார். எனவே இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!