பூமிதான இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செல்வபுரம் அம்சாநகர் பகுதியில் பூமிதான இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 25 ஆண்டுகளாக, 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு அதே முகவரியில் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை காலி செய்ய கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் வருவாய்த்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது. பூமிதான இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த இடத்திற்கு, பட்டா வழங்க கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இரண்டாவது முறையாக கிருஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம் வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளின், இந்த நடவடிக்கைகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூலி வேலைக்கு செல்லும் மக்களின், வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியும் உள்ளதால் உடனடியாக பட்டா வழங்கி உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu