ஆன்லைன் கடன் மோசடி: மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் பெண் புகார்

கோவை துடியலூரைச் சேர்ந்த சரண்யா
கோவை துடியலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மொபைலில் வந்த ஆன்லைன் கடன் லிங்கை கிளிக் செய்ததால் தற்போது கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக கூறி அவரது குடும்ப புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் கோரி மிரட்டல் விடுவதாக கூறி கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு படுகர் மொழியில் வீடியோ வெளியிட்டுள்ளார் தற்போது அந்த வீடியோ இளையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை துடியலூரைச் சேர்ந்தவர் சரண்யா, படுகர் இனத்தைச் சேர்ந்தவ இவர் ஊட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மொபைல் போனில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் ஆப் குருந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதை என்னவென்று பார்ப்பதற்காக கிளிக் செய்துள்ளார். அதில் ஆன்மூலம் லோன் தருவதாக வந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்கை விட்டு வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் லோன் வாங்கியுள்ளீர்கள் அதற்கான தொகையை கட்டுமாறு கூறியுள்ளனர்.
அவர்களிடம் நான் லோன் வாங்கவே இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் நீங்கள் லோன் வாங்கியுள்ளீர்கள் கட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளனர். சரண்யா முடியாது என கூறவே தொடர்ந்து போன் செய்து சார்ச்சர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சரண்யாவின் குடும்பத்தினர் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து அதனை ஆபாச வீடியோவாக சித்தரித்து அவருக்கே அனுப்பி லோன் தொகையை கட்டவில்லை என்றால் அனைவருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு சரண்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் எவ்வாறு ஏமாந்தேன் என்றும் இனி யாரும் வாட்சப்பில் வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம், அது போன்ற லிங்குகளை யாருக்கும் பார்வேட் செய்ய வேண்டாம், அது போல லிங்குகள் வந்தால் உடனடியாக அதை டெலிட் செய்யவும் என்னைப் போல் யாரும் கஷ்டப்படவேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என கண்ணிர் மல்க படுகர் மொழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இளையத்தில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu