மாநில எல்லையில் கண்காணிப்பு இல்லை -அதிகாரிகள் அலட்சியம்

மாநில எல்லையில் கண்காணிப்பு இல்லை -அதிகாரிகள் அலட்சியம்
X
கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படாமலே வந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதியில் தமிழக எல்லை முடிந்து, கேரளா எல்லை ஆரம்பமாகிறது. இந்தப்பகுதி வழியாக கேரளாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் இருந்து பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் தமிழக எல்லைக்குள் வந்து செல்கின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதிக்கவும், கண்காணிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்குள் வந்து கேரளா திரும்புபவர்கள் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படாமலே வந்து செல்கின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனைகட்டி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இதுவரை 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள எல்லைப்பகுதியில் 50 க்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக எல்லையான ஆனைகட்டியில், சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த வித பரிசோதனையும் செய்யாமல், ஆஜாக்கிரதையாக இருந்து வருகின்றனர். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture