கோவை: மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் கைது

கோவையில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திமாநகர் பகுதி மூன்றாவது விதியில், குமார் (எ) லவேந்திரன் ( 49). அவர் மனைவி கவிதா (32) மகன்கள் பூபதி மற்றும் யோசுவா ஆகியோருடன் குடும்பத்துடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகிறார். குமார், பழைய கட்டிடம் இடிக்கும் பணி செய்து வருகிறார். கவிதா, ஸ்பின்னிங் மில் தொழிலாளி.

கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார் என்கிற லவேந்திரனை திருமணம் செய்து, தனது முதல் மகனுடன் வசித்து வந்துள்ளார். கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்ததால், கவிதாவுக்கும் லவேந்திரனுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு, சண்டை முற்றியதில், கோபத்தில் இருந்த லவேந்திரன் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியதில், மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே கவிதா இறந்துள்ளார்.குமார்(எ) லவேந்திரன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சரவணம்பட்டி போலீசார் லவேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் பவானிசாகர் அகதிகள் முகாமில் வைத்து லவேந்திரனை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கோடைக்காலம் வந்துவிட்டாலே நுங்கு தான் !..இந்த நுங்கு நம்ம உடம்புக்கு என்னென்ன நன்மைகளை தருதுனு..பாக்கலாமா..!