3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டி: போலீஸ் விசாரணை

3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டி: போலீஸ் விசாரணை
X

சாந்தி.

மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் 3 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் நாகப்பா காலணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஆரியன், ஆரியா என்ற 3 மாத இரட்டை குழந்தைகளும் இருந்தனர். இவர்களது வீட்டில் ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். சாந்திக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா மருந்துக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு குழந்தைகளை சாந்தியிடம் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது சாந்தி இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியுள்ளார். வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா காயமடைந்த இரண்டு குழந்தைகளையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆர்யன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆர்யாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய சாந்தியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!