திமுக நிறைவேற்றும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது: எஸ்.பி.வேலுமணி

திமுக நிறைவேற்றும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது:  எஸ்.பி.வேலுமணி
X

எஸ். பி. வேலுமணி பரப்புரை

திமுக நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார். திமுக வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை.

நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் பத்மாவதி, கே.மணி, காயத்ரி, விக்னேஷ், சங்கீதா பிரகாஷ், வனிதாமணி, ரம்யா, ரேவதி, அம்பிகா, ராஜேந்திரன், மாரிமுத்து, பாலசுந்தரம் ஆகியோரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கண்ணம்பாளையம் துடியலூர் பகுதியில் செய்து தந்த மேம்பால திட்டம் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார். மேலும் தற்பொழுது உள்ள திமுக நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார். திமுக வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை என தெரிவித்த அவர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் அளித்த வாக்குறுதியை நம்பி தற்போது 8 மாணவ மாணவிகள் உயிரிழந்ததுள்ளனர் என குற்றம் சாட்டினார். பொங்கல் பரிசு தொகுப்பில் அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய் தரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் 100 ரூபாய் கூட தரவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் காவல்துறையினர் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் தற்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தால் திமுக தோல்வி அடைந்து அதிமுக வெற்றி அடையும் என தெரிவித்தார். எனவே வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் உட்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....