மண் எடுக்க எவ்வித தடையும் இல்லை- திமுக வேட்பாளர்

மண் எடுக்க எவ்வித தடையும் இல்லை- திமுக வேட்பாளர்
X

மண் எடுக்க அதிகாரிகளோ போலீசாரோ எவ்வித தடையும் விதிக்க மாட்டார்கள் என்று திமுக வேட்பாளர் உறுதியளித்தார்.

கோயமுத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணன் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுக, தற்போது தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதாகவும் இந்த அறிவிப்புகளை ஆட்சியில் இருக்கும்போது ஏன் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கவுண்டம்பாளையம் உடையார் வீதி பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த அவர், அங்குள்ள கோவிலில் இஸ்லாமியர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் .தொடர்ந்து மண்பாண்ட தொழிலாளர்கள் வழங்கிய கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட பையா கிருஷ்ணன், மண்பாண்ட தொழிலுக்கான மண் எடுப்பதில் நிலவும் சிக்கலை ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தீர்த்து வைப்பேன் எனவும் ஆட்சி அமைந்த பிறகு மண் எடுக்க அதிகாரிகளோ போலீசாரோ எவ்வித தடையும் விதிக்க மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!