தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி முகாம்
கோவையில் பல்வேறு துறைகளில் பணி புரியும் வைரஸ் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ள 18 முதல் 44 வயதுக்குட்பட்ட பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் முதற்கட்டமாக வைரஸ் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கும், தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களான சமையல் எரிவாயு விநியோகப் பணியாளர்கள், தினசாரி நாளிதழ் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகம் செய்யும் முகவர்கள், மருந்தகங்களில் பணிபுரிபவர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுனநர்கள், மகிழுந்து ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் பணியாளர்கள், ஸ்விகி, சொமேடோ உள்ளிட்ட நிறுவனங்களில் உணவு விநியோகம் செய்யும் பணியாளர்கள், கட்டுமான பணியாளர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் நேற்று வரை பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 17,944 தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நிலையில் இன்று 15,000 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டு பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள விடுதி ஒன்றில், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகளில் பணியாற்றும் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu