கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி தற்கொலை

கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளி தற்கொலை
X
மத்தம்பாளையம் பகுதியில் உள்ள கொரானா சிகிச்சை மைய வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகையன்(65). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கடந்த மே 12 ஆம் தேதி இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து மத்தம்பாளையம் பகுதியில் உள்ள கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை மைய வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு சுமார் 12:30 மணி அளவில் இவரது உடலை பார்த்த பணியாளர்கள் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் உடலை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த இரு தினங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்றும் அதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகிச்சை மையத்திற்கு வந்த இரண்டு நாளிலேயே நோயாளி தற்கொலை செய்துகொண்டது அங்கு இருக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பிற நோயாளிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்று உறுதியான பலரும் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் இதுபோன்று முடிவுகள் எடுப்பது மிகவும் தவறானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

#coimbatore #instanews #tamilnadu #கோவை #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கொரோனா #corona #covid19 #coronavirus #suicide #police #doctors #Investigation #தற்கொலை

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!