கோவையில் இன்று 169 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் பலி
கொரோனா பரிசோதனை
கோவை மாவட்டத்தில் நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று 169 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 28 ஆயிரத்து 504 உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 248 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 24 ஆயிரத்து 392 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2165 ஆக அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu