பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகாரளிக்க குழு: அமைச்சர் அன்பில் மகேஷ்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் CSR activity மூலமாக பல தன்னார்வ அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உதவிகளை செய்து வருகின்றன எனவும், இன்னும் அதிக உதவிகள் கிடைக்கபெற்று வருவதாக தெரிவித்தார்.CSR activity மூலமாக உதவிகள் கிடைக்க பெற அதற்கென்று தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும் எனவும் அதன் மூலமாக இன்னும் முறையாக தேவைகேற்ப உதவிகள் கிடைக்கும் என்றார்.
கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்பறுத்தல் சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக சென்ற போது பள்ளி நிர்வாகம் மலுப்பலான பதில் அளித்ததாகவும் பின்னர் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் தெரிவித்தார். குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க பாடவேண்டும் என்றவர் இது போன்ற பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹெல்ப்லைன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக மாணவர்களுக்கு அதிகபடியான விழிப்புணர்வு இல்லை என்றவர் பள்ளிகள் முழுவீச்சில், முழுமையாக திறந்த பிறகு அது தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உடனடியாக கட்டணம் கட்ட வேண்டும் என்பது தொடர்பாக புகார்கள் வந்து கொண்டுதான் இருப்பதாகவும் இது தொடர்பாக அரசு அது போன்ற கல்வி நிறுவனங்கள் மீது எச்சரிக்கை விடுப்பது மட்டுமல்லாமல் நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். பள்ளிகளில்பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு அதுபோன்ற அறிவிப்புகள் பள்ளி கல்வி துறை சார்பாக வெளியிடப்பட்டு முறையாக மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu