கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் - கோவை கலெக்டர் நடவடிக்கை
X

பாலமுருகன்

கோவையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் என்கிற சொரிபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் என்கிற சொரிபாலன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார்.

இதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பாலமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
the future of conversational ai