2 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு -கோவை எம்பி உதவி
காய்கறிகள் தொகுப்பு வழங்கிய கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன்
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியக்குழுவிற்குட்பட்ட சிவானந்தபுரம் 2 ஆவது கிளையின் சார்பில் ஏழை, எளிய குடும்பங்கள் பயனடையும் வகையில் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.
சிவானந்தபுரம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் தக்காளி, கத்தரி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை தொகுப்புகளாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு காய் கறி தொகுப்பினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கொடுத்து துவக்கி வைத்தார். சிவானந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் இலவசமாக விநியோகிக்க மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu