ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு.
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். திருப்பூர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஓரே நேரத்தில் அர்ப்பணிக்கபடுகின்றது. 4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதேபோல செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை பிரதமர் முன்னிலைபடுத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் மூலம் 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய வானொலி நிலையம் எங்கும் மூடப்படாது, தற்போது தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணிகள் மட்டுமே நடக்கின்றது. தமிழக முதல்வரின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து குறித்த கேள்விக்கு , அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஓன்றுதான் என்று தெரிவித்தார்.
எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அவர், பின்னர் மீண்டும் திரும்பி வந்து, தமிழகத்திற்கு 11 மருத்துவகல்லூரிகள் மட்டுமின்றி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியும் வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றது எனவும், அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும் , கட்டாயம் தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu