பட்டா பெயர் மாற்ற லஞ்சம் : வி. ஏ. ஓ உட்பட 2 பேர் கைது

கோவை மாவட்டத்தில் நிலப்பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ. ஓ உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் நிலப்பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ. ஓ உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அண்மையில் வாங்கிய நிலத்திற்கு தனது தாயார் பெயரில் பெயர் மாறுதல் செய்ய அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரைப்படி, பன்னிமடை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற கார்த்திக், ராசாயணம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒய்வு பெற்ற உதவியாளர் பழனிசாமியிடம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஒய்வு பெற்ற உதவியாளர் பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்