டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை - திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்

டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை - திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்
X

திமுக அதிமுக வாக்குவாதம்

மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் 293 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 200க்கும் மேற்பட்ட கடைகளில் டெண்டர் அடிப்படையில் பார்கள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான பார்களை திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த பிரமுகர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாக பதவிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு வேண்டும் என கூறி மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் அளவுக்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!