கோவையில் 9 டாஸ்மாக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க தடை

கோவையில் 9 டாஸ்மாக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க தடை
X

கோவை மாநகர பகுதி.

கோவையில் மதுப் பிரியர்கள் அதிகம் கூடும் 9 டாஸ்மாக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் செயல்பட தடை தொடர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், இறைச்சிக் கடைகள், பூங்காக்கள் மற்றும் மால்கள் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவையில் மது பிரியர்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் சாலை,100அடி சாலை, துடியலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 9 டாஸ்மாக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்க தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!