கொரோனா தடுப்பு பணிகள் - தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

கொரோனா தடுப்பு பணிகள் - தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
X

கொடிசியா அரங்கில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு

கொரோனா தொற்று பாதிப்புகளை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவலில் தமிழ்நாட்டில், கோவை முதலிடத்தில் உள்ளது. இந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று கோவையில் ஆய்வு மேற்கொண்டார். கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளை இறையண்பு பார்வையிட்டார். மேலும் மருத்துவக் கட்டமைப்பு, மருந்து கையிருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், எடுக்கப்பட்ட உள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு அதிகாரி ஜெகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோவையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதாகவும், கொரோனா தொற்று பாதிப்புகளை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.

Tags

Next Story