மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம்

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம்
X
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் 1600 அடிஉயர மலைஉச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம்

கோவை- பாலக்காடு ரோடு, குனியமுத்தூருக்கு அருகே உள்ள மதுக்கரையில் பிரசித்திபெற்ற தர்மலிங்கே ஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. கோவில், தரைமட்ட த்தில் இருந்து 1600 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 960 படிகள் ஏறி சென்று, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தி ருவிழா மற்றும் கிரிவலம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது கோவை மட்டுமின்றி அண்டைபல்வேறு மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் அதிகளவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் கொள்வர்.

நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இக்கோவிலில் கார்த்திகை திருவிழாவை கண்டுக ளிப்பதற்காக திருமலைபாளையம், சாவடி, சீரப்பாளையம், அரிசிபாளை யம், எட்டிமடை, கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர், குரும்பபாளையம், ஈச்சனாரி, அறிவொளி நகர், எம்ஜிஆர் நகர், மதுக்கரை மார்க்கெட், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திரு ந்தனர்.

மேலும் இந்த கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளநிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் திருவிழாவை மதுக்கரை ஊர்மக்களும், 2-வது நாள் திருவிழாவை திருமலையாம்பாளையம் பொது மக்களும், 3-வது நாள் திருவிழாவை எட்டிமலை ஊர்மக்களும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை கிரிவலம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாளை கிரிவலத்தின்போது காலை முதல் மாலைவரை அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் மாதாமாதம் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போதும் இங்கு பௌர்ணமி கிரிவலம் நடத்தப்படும்.

பழம்பெருமைவாய்ந்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கும் மேல் கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil