துடியலூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை கொள்ளை
பைல் படம்
கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆனந்தா கார்டன் விரிவாக்கப் பகுதியை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை கஸ்தூரி(வயது65)
இவரது கணவர் இறந்து விட்டதையடுத்து, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 26ம் தேதி கஸ்தூரி தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்களது சொந்த ஊரான மதுரையில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான கஸ்தூரி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இதையடுத்து பீரோவில் வைத்துள்ள நகைகள் இருக்கிறதா என கஸ்தூரி தேடி பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த வைர நெக்லஸ், தங்க நெக்லஸ், கம்மல், வளையல் உள்பட மொத்தம் 28 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
இவர்கள் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அதன்பின்னர் உள்ளே நுழைந்து, நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கஸ்தூரி துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இதுகுறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகையை கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகின்ற னர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu