மானியத் திட்டத்தில் மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை தொகுப்பு
Mooligai Plants in Tamil
Mooligai Plants in Tamil-உணவே மருந்து என்ற நிலையிலிருந்து மருந்தே உணவு என்ற நிலைக்கு படிப்படியாக மாறி வருகிறோம். முதியவர்கள் மட்டுமல்லாமல் இளையவர்களும், கூடவே மாத்திரை டப்பாவை கொண்டு செல்லும் அவல நிலை உருவாகி வருகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நாம் நமது வாழ்வியலைத் தொலைத்து விட்டு செயற்கை உணவுகளுக்கு அடிமையாகிப் போனதால் நேர்ந்த வந்த அவலம் இது. ஒரு வியாதி வந்தால் அதனைத் தீர்க்க ஒரு மருந்து, பின்னர் அந்த மருந்தினால் வரும் பக்க விளைவுகளைத் தவிர்க்க மற்றொரு மருந்து என மருந்துக்கு மேல் மருந்து என்ற நிலை உருவாகி விட்டது.
எனவே மீண்டும் இயற்கைக்குத் திரும்பும் ஆர்வம் பலருக்கு உருவாகி நமது பாட்டி வைத்தியத்தின் மேல் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வைத்திய வழிமுறைகளை சொல்லித் தருவதற்கு பாட்டிகள் இல்லை என்றாலும் அதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. இந்த மூலிகைகள் எங்கே கிடைக்கும் என்பது தான் பிரச்னை.
இதனை தீர்க்கும் விதமாக வீடுதோறும் மூலிகைப் பண்ணை அமைக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் மூலிகை நாற்றுகள் வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியுள்ளதாவது: மூலிகை தொகுப்பு திட்டத்தில் ஆடாதொடா, தூதுவளை, அஸ்வகந்தா, வல்லாரை, இன்சுலின், கற்பூரவல்லி, வசம்பு, பிரண்டை, துளசி மற்றும் ஜிம்னிமா ஆகிய 10 வகையான மூலிகை செடிகள் தலா 2 செடிகள் வீதம் 20 செடிகள் வழங்கப்படும்.
தவிர செடிகள் வளா்ப்பதற்கு 10 வளா்ப்பு பைகள், 20 கிலோ காயா் பித், 4 கிலோ மண்புழு உரம் மற்றும் பயிற்சி கையேடு ஆகியவை மூலிகை தொகுப்பில் அடங்கியிருக்கும்.
எனவே, கோவை மாவட்டத்தில் மூலிகைத் தொகுப்பு பெற விரும்புபவா்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம்.
ஒரு தொகுப்பின் விலை, 1,500 ரூபாய். 50 சதவீத மானியத்தில், 750 ரூபாய் பயனாளிகளின் பங்குத்தொகையாக வசூலிக்கப்படும். ஒரு பயனாளி ஒரு தொகுப்பு மட்டும் பெற தகுதி உடையவர்
மாவட்டத்துக்கு 500 மூலிகை தொகுப்புகள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா் என்று அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu