வால்பாறையில் அரசுப் பேருந்துகள் மோதல்: பதறவைக்கும் விடியோ

வால்பாறையில் அரசுப் பேருந்துகள் மோதல்: பதறவைக்கும் விடியோ
X
வால்பாறை பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து பற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வால்பாறை வெள்ளிமலை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக அரசுப் பேருந்து வந்துள்ளது. வரும் வழியில் அரசுப் பேருந்தில் பிரேக் செயல் இழந்ததால் சாலையில் நின்றிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி சென்றது

அப்போது பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வந்த அரசுப் பேருந்து எதிரே வரும்போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பயணிகளுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் என 20-க்கும் மேற்பட்டவர்கள் காயங்கள் ஏற்பட்டது.

பின்பு அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதில் ஆறு பயணிகளுக்குக் காயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் வால்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி