கோவை பருத்தி ஆராய்ச்சி மையத்தில் அறுவடை துவக்கம்
பைல் படம்.
கோவை மருதமலை சாலையில் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமாக வீரகேரளத்தில் 54 ஏக்கர் நிலமும், மருதமலை சாலையில் 25 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த நிலங்களில் பருத்தி பயிரிடப்பட்டிருந்தது. இதுதவிர இங்கு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை வீரகேரளம் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பல தரப்பட்ட பருத்தி ரகங்களை பயிர் செய்து பாதுகாத்து வருகின்றனர். இதில் ஆராய்சசிக்கு தேவையான பருத்தியை வைத்து கொண்டு மீதம் உள்ள பருத்தியை அன்னூர் அரசு சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். தற்போது ஒரு குவிண்டால் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது.
இந்த நிலையில் வீரகேரளம் பருத்தி ஆராய்ச்சி நிலைய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த பருத்திகள் நன்கு முதிர்ந்து வெடித்து உள்ளது. பருத்தி காற்றில் சில பறந்து வீணாகி வருகிறது. சரியான நேரத்தில் ஏக்கர் கணக்கில் விளைந்து உள்ள பருத்திகள் அறுவடை செய்யபடாததால் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து வீரகேரளம் பருத்தி ஆராய்ச்சி நிலைய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திகள் அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu