/* */

கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்கும் வசதி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அவசர உதவிக்கு அணுக காவலர் நியமனம்

HIGHLIGHTS

கோவை ரேஸ்கோர்சில் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் குறைகளை தெரிவிக்கும் வசதி
X

பைல் படம்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க வசதியாக நடைபாதையை ஒட்டிய பூங்கா நுழைவாயில் அருகே அமர்ந்து பணியாற்றும் வகையில் ஒரு ஆண், ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் சட்டம் ஒழுங்கு, குற்றம், சுகாதாரம், மின்வாரியம் உள்பட அனைத்துவித துறைகள் சார்ந்த பிரச்னைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதை பதிவு செய்து கொள்ளும் அங்குள்ள காவல்துறையினர் , சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தகவல் அளிப்பார்கள். அவர்கள் அந்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பர். இதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் காவல்துறையுடன் தொடர்பில் இருப்பர். இதன் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Updated On: 10 May 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?