கோவையில் செம்மொழி பூங்கா: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கோவையில், முதல்கட்டமாக, 45 ஏக்கர் பரப்புக்கு செம்மொழி பூங்கா அமைய உள்ள இடத்தை அளவீடு செய்து, எல்லை கற்கள் நட, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஆட்சியர் கிராந்திகுமார் அறிவுறுத்தியிருந்தார் கோவையில், செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்தை, பேஸ்-1, பேஸ்-2 என இரண்டாக பிரித்து செயல்படுத்த முடிவாகி இருக்கிறது. மாநகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீட்டுக்காக, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
மற்ற பூர்வாங்க வேலைகளை முடித்து, தயார் நிலையில் இருப்பதற்காக, பூங்கா அமைய உள்ள இடத்தை, கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள், திட்டம் தொடர்பாக விளக்கினர்.
எந்தெந்த இடத்தில் என்னென்ன கட்டமைப்பு ஏற்படுத்தப் போகிறோம் என, வரைபடத்தை காட்டினர். சிறைத்துறை அதிகாரிகளுக்கான மூன்று குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். பழமையான கட்டடமாக இருப்பதால், அவற்றை இடிக்காமல், பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். மரங்களை வெட்டாமல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், வடிவமைப்பாளர்களுடன் பேச, கலெக்டர் அறிவுறுத்தினார். செம்மொழி பூங்கா அமையும் இடங்களை இப்போதே அளவீடு செய்து, எல்லை கற்கள் நட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று தாக்கலான நிதிநிலை அறிக்கையில் கோவையில் செம்மொழி பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்க 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu