கோவை மார்க்கெட்டில் தீபாவளியையொட்டி பூக்கள் விலை உயர்வு

கோவை மார்க்கெட்டில் தீபாவளியையொட்டி பூக்கள் விலை உயர்வு
X

மலர் சந்தை - கோப்புப்படம் 

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1200-க்கு விற்பனையானது. பூக்கள் விலை உயர்ந்ததால் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது

கோவை பூ மார்க்கெ ட்டுக்கு கோபிச்செட்டி பாளையம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருநது தினமும் 40 டன்னுக்கு மேல் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக பூக்கள் விலை குறைந்து இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயரத் தொடங்கி உள்ளது.

மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. இன்று கிலோ ரூ.400 உயர்ந்து ரூ.1200-க்கு விற்கப்பட்டது.

இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பூக்களின் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-

செவ்வந்தி - ரூ.100, செண்டுமல்லி - ரூ.80, ரோஜா - ரூ.100, அரளி - ரூ.160, வாடாமல்லி - ரூ.120, வெள்ளை செவ்வ ந்தி - ரூ.240, மரிக்கொழுந்து - ரூ.30, துளசி - ரூ.30, கோழிக்கொண்டை - ரூ.80, கலர் செவ்வந்தி- ரூ.100, சம்பங்கி - ரூ.80,

தாமரைப்பூ ஒன்று ரூ.40க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கும், வாழைக்கன்று ஜோடி - ரூ.20-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ ரூ.100, தேங்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூக்கள் விலை உயர்ந்ததால் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!