கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
X

கோவை பூ மார்க்கெட் - கோப்புப்படம் 

கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவயொட்டி பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழா நாளை 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரிகடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கும் பூ மார்க்கெட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மேலும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபாரிகளுக்கு ஏலமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்கணக்கில் பூக்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநேரத்தில் வெளியூர்,வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது. எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலைகளும் சற்று அதிகரித்து உள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்படுகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

செவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

கோவை பலசரக்கு மற்றும் மொத்த வியாபார கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!